Tuesday, October 26, 2010

நட்பு!

நட்பு!


இது இல்லாத எவருமே இல்லை. உலகில் உள்ள அனைவரின் வாழ்கையிலும் உள்ள ஒரே உறவு நட்பு. ஏன் அடித்து கொள்ளும் இரு வேறு விலங்குகளும் கூட நட்புறவுடன் பழகுவதை நாம் பார்க்க முடியும். ஏனென்றால் நட்பு வலிமையானது. தன்னலமற்றது. யார் சொல்லியும் வராததது. தனக்கு நிறைய நண்பர்கள் உள்ளார்கள் என்பதை விடவும் ஒரே ஒரு நண்பன் இருந்தாலும் அன்போடு இருந்தால் அது போதும் உலகையே ஆளலாம். நம் ஒவ்வொரு துன்பத்திலும் உடல் மற்றும் பணகஷ்டதில் உதவுவது நண்பர்களே. நம் வாழ்கையில் பின்னோக்கி பார்கையில் தன் துன்பதில்ளெல்லாம் தன்னுடன் நின்ற நண்பர்களை பேசாதவர்களே கிடையாது. இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் உடன் இருப்பது நட்பு. இதை நாம் மருத்துவமனைகளில் காண முடியும். உடனிருந்து யியற்கை உபாதைகளை சுத்தம் செய்வது கூட நண்பர்களே. நட்பு இல்லாத மனித உயிர்களே கிடையாது. உலகில் நம் அத்தனை உறவுகளும் முன்பே நிர்ணிக்கப்பட்டது. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை, மகன், மகள் என அத்தனையும், ஏன் திருமணம் கூட சொர்க்கத்தில் நிச்சயிக்க பட்டது. அனால் நட்பு மட்டுமே நம் வாழ்வில் நாமே தேர்ந்தெடுப்பது. இதில் விரிசல் விழுந்தாலும் சேர்த்துவைக்க யாரும் இல்லை. இருந்தும் வாழ்வின் எல்லை வரை விரிந்து கிடப்பது நட்பு. இது "A" போன்றது. மேல் நுனியில் ஒருவரை ஒருவர் அணவு கொடுத்து தாங்கி நிற்பர். நடுவில் இணைப்பு கோடாய் நட்பு. Friendship forever.


BALA.

No comments:

Post a Comment