Saturday, March 16, 2019

சீக்ரெட் - ரகசியம் ஈர்ப்பு விதி

சீக்ரெட் - ரகசியம்: படத்தில், உங்களுக்கு ஈர்ப்பு விதியை பயன்படுத்த வேண்டும் எனில் "ஒரு  கப் டீ தேநீரை  கவர்ந்து இழுத்து பாருங்கள்" என்று சொல்லி இருப்பார்கள்.

அது ஏன் டீ - தேநீரை, குறிப்பிட்டார்கள்?
 எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்பொழுது தேநீரை குறிப்பிட வேண்டிய அவசியம் ஏன்?

ஏனெனில் நம் மனம் எப்பொழுதும்  ஒரு வரம் கிடைத்து இருக்கிறது எனில், நம்முடைய வாழ்க்கையில் எதை நாம் சாதிக்க வேண்டுமோ அதை மட்டுமே கேட்கும். அச்சமயத்தில் ஞாபகப்படுத்தும்.
 உயர்ந்த இலக்குகளை உடனே நம்மால் நினைவு கூற முடியும்.

 ஆனால் நம் மனதிற்கு நன்றாக தெரியும்.
 "இந்த ஈர்ப்பு விதி மூலம் ஒரு உயர்ந்த இலக்கை நான் கவர்ந்து இழுக்கிறேன்" என்று சொல்லும் பொழுது திரும்பி "இதையா?  உன்னால் முடியுமா?", என்று திருப்பிக் கேட்கும்.

அவ்வாறு மனம் திருப்பிக் கேட்கும் எந்த விஷயத்தையும் உங்களால் கவர்ந்து இழுக்க முடியாது.

அதே ஒரு கப் தேனீர் என்றால் மனம் " ஓ, பண்ணலாமே" என்று உடனே உடன்படும்.

 சின்ன சின்ன விஷயங்களில் கவர்ந்து இழுத்து பழகும்பொழுது நம் மனம் பழக்கப்பட்டு ஈர்ப்பு விதியை முழுமையாய் புரிந்துகொண்டு நம் இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும்.
 அதற்காகவே முதன்முதலாக தேனீரை கவர்ந்து இழுக்க இந்த ரகசியத்தின் மூலம் நமக்கு சொல்லி இருக்கின்றனர்.

நன்றி.

அற்புத வாழ்க்கை
குமாரவேல்.

Friday, March 15, 2019

நன்றியுணர்வு

நன்றியுணர்வு.....


உங்களுக்கு கிடைத்திருக்கும் 
அனைத்து நன்மைகளுக்கும் 
வசதிகளுக்கும் 
நீங்கள் நன்றியுணர்வோடு இருக்கும் பொழுது,
 அந்த நன்றி உணர்வை வெளிப்படுத்தும் பொழுது,
இன்னும் நிறைய வசதிகள் வாய்ப்புகள் நன்மைகள் 
கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகிறது.

இதில் முக்கியமானது,
 இந்த நன்றி உணர்வு என்பதே 
தானாக நம் உள்ளிருந்து வரும் உணர்வாக இருக்க வேண்டுமே தவிர
 இனிவரும் காலங்களில் இதெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்கான 
ஒரு ஒப்பந்தம் செய்வது போல நன்றி உணர்வு அமைந்துவிடக்கூடாது.

நன்றி உணர்வு பற்றி கொடுக்கப்பட்ட 
அனைத்து விஷயங்களும் ஒன்றை தெளிவாக சொல்கின்றது. 
அது நன்றி உணர்வோடு இருக்கும்பட்சத்தில் 
ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்ற விதிப்படி 
நாம் எதற்கு நன்றியோடு இருக்கிறோமோ 
அவற்றை நாம் மீண்டும் பெறுகிறோம் என்பதே.

ஆனால் இவற்றை எல்லாம் பெற வேண்டும் 
என்பதற்காக நன்றி உணர்வோடு இருப்பது என்பது 
இந்த விதியின் கீழ் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

எனவே நன்றி உணர்வோடு,
 முழுமையான நன்றி உணர்வோடு,
 எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நன்றி உணர்வோடு வாழ்வோம்...
 அனைத்தையும் பெறுவோம்...

இவன்,
அற்புத வாழ்க்கை..
குமாரவேல்.