Tuesday, October 26, 2010

அன்பு!

அன்பு!

நமக்கு அன்பு என்றால் என்ன என்பதை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தது அம்மா. அதை யாரும் மறுப்பதில்லை. தன் பிள்ளைகள் என்னதான் தவறுகள் செய்தலும் அதை மன்னித்து அவர்களை தன அன்பால் மட்டுமே திருத்துபவள் அவள் மட்டுமே. பிள்ளைகளும் என்றுமே தன் அத்தனை பிரச்சனைகளையும் மனம் விட்டு கூறுவதும் அவளிடம் மட்டுமே. தன் மகனை சான்றோன் என கிட்ட தாய் மட்டுமல்ல அவன் திருடனை இருந்தாலும், கொலைகாரனாக இருந்தாலும் கூட என்றும் அவனுக்காக மனமுருகுபவள் அவள். தன் மகளுக்காக அவள் மகளின் திருமணத்திற்கு பின்னும் தன் ஆயுள் முடியும் வரை போராடுபவள். தன் பிள்ளைகள் மட்டுமின்றி எல்லாருடைய குழந்தைகளையும் தன் குழந்தையாய் பர்ர்பவள். நாம் பலமுறை நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது இதை உணர முடியும். உணவு பரிமாறும் போதும், கண்டிக்கும் போதும் அன்னையின் அன்பு தெரியும். நம் நண்பர்களுக்கும் நம் தாய் அவ்வாறே தோன்றும். இது மாறாதது.அன்னை தெரசாவின் அன்பு உலகம் அறிந்ததே. நோய் கொண்ட, அனாதையான அத்தனை உயிர்களையும் தன் தாய் அன்பினால் அரவணைத்தவர் அவர். அதே போல் அன்போடு வளர்ப்பதும் அவளே. பையன்கள் வளர்ந்த பின்பு தன் மனைவியடம் எதிர் பார்ப்பது தான் சிறு வயது முதல் அனுபவித்து வளர்ந்த தாயின் அன்பு மட்டுமே.அண்மையில் திருச்சி ஐயப்பன் கோயிலில் இருந்த கல்வெட்டில் படித்தது"உலகில் மிகவும் அமைதியான இடம் எது? தாயின் மடி!" --------------- உண்மை தானே?

பாலா.

No comments:

Post a Comment