Saturday, March 16, 2019

சீக்ரெட் - ரகசியம் ஈர்ப்பு விதி

சீக்ரெட் - ரகசியம்: படத்தில், உங்களுக்கு ஈர்ப்பு விதியை பயன்படுத்த வேண்டும் எனில் "ஒரு  கப் டீ தேநீரை  கவர்ந்து இழுத்து பாருங்கள்" என்று சொல்லி இருப்பார்கள்.

அது ஏன் டீ - தேநீரை, குறிப்பிட்டார்கள்?
 எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்பொழுது தேநீரை குறிப்பிட வேண்டிய அவசியம் ஏன்?

ஏனெனில் நம் மனம் எப்பொழுதும்  ஒரு வரம் கிடைத்து இருக்கிறது எனில், நம்முடைய வாழ்க்கையில் எதை நாம் சாதிக்க வேண்டுமோ அதை மட்டுமே கேட்கும். அச்சமயத்தில் ஞாபகப்படுத்தும்.
 உயர்ந்த இலக்குகளை உடனே நம்மால் நினைவு கூற முடியும்.

 ஆனால் நம் மனதிற்கு நன்றாக தெரியும்.
 "இந்த ஈர்ப்பு விதி மூலம் ஒரு உயர்ந்த இலக்கை நான் கவர்ந்து இழுக்கிறேன்" என்று சொல்லும் பொழுது திரும்பி "இதையா?  உன்னால் முடியுமா?", என்று திருப்பிக் கேட்கும்.

அவ்வாறு மனம் திருப்பிக் கேட்கும் எந்த விஷயத்தையும் உங்களால் கவர்ந்து இழுக்க முடியாது.

அதே ஒரு கப் தேனீர் என்றால் மனம் " ஓ, பண்ணலாமே" என்று உடனே உடன்படும்.

 சின்ன சின்ன விஷயங்களில் கவர்ந்து இழுத்து பழகும்பொழுது நம் மனம் பழக்கப்பட்டு ஈர்ப்பு விதியை முழுமையாய் புரிந்துகொண்டு நம் இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும்.
 அதற்காகவே முதன்முதலாக தேனீரை கவர்ந்து இழுக்க இந்த ரகசியத்தின் மூலம் நமக்கு சொல்லி இருக்கின்றனர்.

நன்றி.

அற்புத வாழ்க்கை
குமாரவேல்.

Friday, March 15, 2019

நன்றியுணர்வு

நன்றியுணர்வு.....


உங்களுக்கு கிடைத்திருக்கும் 
அனைத்து நன்மைகளுக்கும் 
வசதிகளுக்கும் 
நீங்கள் நன்றியுணர்வோடு இருக்கும் பொழுது,
 அந்த நன்றி உணர்வை வெளிப்படுத்தும் பொழுது,
இன்னும் நிறைய வசதிகள் வாய்ப்புகள் நன்மைகள் 
கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகிறது.

இதில் முக்கியமானது,
 இந்த நன்றி உணர்வு என்பதே 
தானாக நம் உள்ளிருந்து வரும் உணர்வாக இருக்க வேண்டுமே தவிர
 இனிவரும் காலங்களில் இதெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்கான 
ஒரு ஒப்பந்தம் செய்வது போல நன்றி உணர்வு அமைந்துவிடக்கூடாது.

நன்றி உணர்வு பற்றி கொடுக்கப்பட்ட 
அனைத்து விஷயங்களும் ஒன்றை தெளிவாக சொல்கின்றது. 
அது நன்றி உணர்வோடு இருக்கும்பட்சத்தில் 
ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்ற விதிப்படி 
நாம் எதற்கு நன்றியோடு இருக்கிறோமோ 
அவற்றை நாம் மீண்டும் பெறுகிறோம் என்பதே.

ஆனால் இவற்றை எல்லாம் பெற வேண்டும் 
என்பதற்காக நன்றி உணர்வோடு இருப்பது என்பது 
இந்த விதியின் கீழ் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

எனவே நன்றி உணர்வோடு,
 முழுமையான நன்றி உணர்வோடு,
 எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நன்றி உணர்வோடு வாழ்வோம்...
 அனைத்தையும் பெறுவோம்...

இவன்,
அற்புத வாழ்க்கை..
குமாரவேல்.

Tuesday, October 16, 2018

குறும்பா!!!!!!!


மகளுக்கு ஆனந்தயாழை மீட்டுகிறாய்.... மகனுக்கு குறும்பா!!!!!!!

https://www.youtube.com/watch?v=ZBtMymYojsg

Thursday, February 1, 2018

நன்றி கூறுதல்

பிரபஞ்சத்திற்கு நன்றி...

Friday, April 22, 2016

வெயிலின் தாக்கம் குறைய:


நான் எப்பொழுதும் வெயில் காலம் வந்தவுடன் ஒரு குளியல்  பொடி தயாரிப்பேன். வியர்குரு, அரிப்பு இல்லாமல் கோடைகாலத்தை கடந்து விடலாம்.

தற்போது வேப்பம்பூ பூத்திருக்கும். வேப்பம்பூ சிறிது காயவைத்து அரைத்து சலித்து வைத்து கொள்ளவேண்டும்.

கடலைமாவு, பயத்தம் மாவு, வேப்பம்பூ பொடி, ஸ்நான பொடி(தேவையெனில் வாசனைக்காக) கலந்து தினமும் குளித்து வர கோடைகாலத்தை சுகமாக கடக்கலாம்.

Wednesday, January 6, 2016

வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் மீண்டும் வர முடிந்தது.

மனதில் பட்டதை எழுதலாம் என்றிருக்கிறேன்.


Sunday, June 9, 2013

மனசோர்வு: Bipolar Disorder:

மனசோர்வு: Bipolar Disorder:


ஆரோகனம் படம் மதியம் பார்த்தேன்.மனசோர்வு பற்றிய படம். நான் சிறுவயது முதலே இது போன்ற சிலரை கண்டதுண்டு. 

நமக்குள்ளும் மன சோர்வுகள் வருவதுண்டு. நாம் வெளிபடுத்துவதிலை. அவர்கள் வெளிபடுத்துகிறார்கள். மற்றபடி நாமும் மனசொர்வுடன் போரடிகொண்டேதான் இருக்கிறோம் வாழ்நாள் முழுமைக்கும்.

தியானம் பழகும் அனைவருக்கும் முதலில் அவர்கள் மனதை கவனிக்க சொல்வார்கள். 
மனதை கவனிக்கும் என் போன்றவர்களுக்கு எத்தனை முறை இதனால் நான் தாக்கப்படுகிறேன் என்பது தெரிகிறது. பலர் இது தெரியாமலேயே வெற்றி கொள்கின்ரனர். சிலர் இதனால் மற்றவர்களிடம் கோவம் கொள்கின்ரனர். மனம் புரிந்து நடப்போம். அன்பை கொடுப்போம்.

இன்றும் என்னை சுற்றி இருக்கும் பலர் இதற்க்கான மருந்துகளை எடுத்து கொண்டு இருக்கின்றனர்.  அவர்களுக்கு தேவை பரிதாபம் இல்லை. அன்பான அரவணைப்பு. 

இந்த அரவனைப்பையே பற்றிகொள்ளும் மனசொர்வுடயவர்களும் உண்டு.  சற்றே முள் மேல் விழுந்த சேலை போல இவர்களை நாம் கையாண்டு சரிபடுத்த முடியும்.

அவன் ஒரு லூசு என்று ஒரே வார்த்தையில் சொல்லி அவர்களை சமுதாயத்திலிருந்து ஒதுக்குவதை விடவும் அன்போடு பழகி நம்மோடு சேர்த்து கொள்வோம்.


எங்கு போய் முடியபோகிறதோ?

எங்கு போய் முடியபோகிறதோ?

முன்பெல்லாம் குப்பை தொட்டிகளில் மட்டும்தான் பிளாஸ்டிக் பைகள் பார்க்க முடிந்தது. அனால் இப்பொழுதோ எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துள்ளது.
இந்த கேரி பைகள் நம் வருகால சந்ததியினருக்கு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் செய்யபோகிறது. தெரிந்தும் நாம் ஏன் இதை உபயோகப்படுத்ட வேண்டும்.
பலருக்கும் கைகளில் பை எடுத்துசெல்வது நாகரீகம் அற்ற செயலாக கருதுகின்றனர். கூடைகள் மறைந்துவிட்டன. 
எல்லாமே பிளாஸ்டிக் மாயம். சோப்பு, ஷாம்பூ, பருப்பு, அரிசி, பழம், துணி, டி, காபி, சாம்பார், சாதம் என எல்லாமே பிளாஸ்டிக் பைகளில்.
வயல்கள், தோப்புகள், கொல்லைகள், நதி, வாய்க்கால், சாக்கடை அனைத்திலும் பிளாஸ்டிக் பைகள்.


எங்கு போய் முடியபோகிறதோ?